தாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம்! சீறும் ராணுவ வீரர்!

அடடே... அப்படியா? சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
mukilan valarmathi - 2026

சென்னையில் அமைந்துள்ள லயோலா கல்லூரியின் வீதி விருது விழாவில் நடைபெற்ற ஓவியங்கள் பல்வேறு தரப்பினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மானாமதுரையைச் சேர்ந்த சியாச்சின் பனிச் சிகரத்தில் பணிபுரியும் ராணுவ வீரர் சிங்கார வேலு தனது ஆதங்கத்தை முகநூல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

நான் இன்று கீழே ஓய்வெடுக்க வந்தபோது முகநூலில் பார்த்தேன் ஏதோ ஒரு கிறுக்கன் தாய் நாட்டையும் பாரத மாதா போன்ற கேவலமான ஓவியங்களை வரைந்து வைத்திருந்தான். அதையும் அந்த கல்லூரி காரன் காட்சிக்கு வைத்திருக்கிறான். அடேய் உங்களுக்கெல்லாம் வெட்கம் மானம் சூடு சொரணை ஏதாவது இருக்கா ஒரு நாள் இங்கு வந்து உங்களை தீவிரவாதிகள் தாக்குதல் இல்லாமலும் அமைதியாக வாழவைப்பதற்கு நாங்கள் என்ன பாடுபடுகிறோம் தெரியுமா?

ஆனால் நீங்க கருத்து சுதந்திரம்….. என்ற பேருல நாட்டை அவமானப் படுத்திட்டு திரியுறீங்க தமிழ் நாட்டில் இது போன்ற ஆட்களை கண்டிப்பாக அடித்து என்று விரட்டுகிறோமோ அன்றுதான் தமிழனுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லது நடக்கும் என்று தனது ஆதங்கத்தை கடுமையான வார்த்தைகளால் எடுத்துக் கூறினார்.

மேலும் இதுபோன்று நாட்டிற்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்களை சட்டத்தின் மூலம் தண்டித்து ஜெயிலில் அடைப்பதை விட இங்கு அனுப்புங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று வேதனை தெரிவித்தார்.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.