20 தொகுதிகளில் திமுக., போட்டி! கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டு விட்டன!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

m k stalin dmk - 2026

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவு பெற்றுள்ளதாக, மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இனி திமுக.,வின் கூட்டணிக் கதவுகள் மூடப் பட்டு விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியவை…

திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுவிட்டது. தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றதால் திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு இனி இடம் இல்லை! திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க 20 இடங்களில் போட்டியிடும்..! விசிக, மதிமுக, இடதுசாரிகள், ஐ.ஜே.கே, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகளுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்கீடு என்பது குறித்து இரண்டொரு நாட்களில் அறிவிக்கப்படும்! உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு யோசனை கூறியுள்ளோம்!

மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்த முறை கூட்டணியில் இடம் ஒதுக்க வாய்ப்பில்லை என்று கூறினார் மு.க.ஸ்டாலின்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.