இந்த நாலரையில்… மோடி என்ன செய்தார்? வன்மையாகக் கண்டிக்கிறோம்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
vaiko modi - 2026

மோடி இந்த நாலரை வருட ஆட்சியில் என்ன செய்தார்?-ஸ்டாலின்.

அதானே, நானே கேக்கலாம்ன்னு தான்இருந்தேன். முதல் முறையா உங்க கருத்துல உடன்படுறேன்.

அலைக்கற்றை ஊழலில் ராசாவும் கனிமொழியும் வெளியே சுத்துறாங்க.

திருட்டு டெலிபோன் விவகாரத்திலே கேடி பிரதர்ஸ் வெளியே வந்துட்டாங்க.

ப சிதம்பரம் குடும்பம் எப்ப பார்த்தாலும் முன்ஜாமீனை ‘பேமிலி பேக்’ காவே பர்ச்சேஸ் பன்னிக்கிறாங்க.

தமிழ் நாட்லே ஏகப்பட்ட சில்லறைகளும் சில பல கழிவுகளும் இஸ்டத்துக்கு பிரிவினை வாதம் பேசுறான்.

நெனச்சப்ப வெல்லாம் கருப்புக்கொடி காட்றேன்னு கெளம்புறாங்கே, தூக்கி உள்ள வச்சு குமுறுனா, இப்படி கெளம்புவானுங்களா?

அரைச்சு வச்ச மாவு புளிக்கலைன்னாலும் மோடி ஒழிக, அதிரசம் கருகினாலும் மோடி ஒழிக, ஆட்டுக்கு சளிபிடிச்சாலும் மோடி ஒழிக,

அரிசி சோத்துல குழைஞ்சிட்டாலும் மோடி ஒழிக, குக்கர் வெடிச்சாலும் மோடி ஒழிக, கொசு கடிச்சாலும் மோடி ஒழிக, கழுதை கத்துனாலும் மோடி ஒழிக, காக்கா சுத்துனாலும் மோடி ஒழிக,

ஐயாக்கண்ணுவோ ஆல்வேய்ஸ் மோடி ஒழிக?

இவனுங்களை யெல்லாம் தேசத்துரோக வழக்குல ரெண்டு வருஷம் உள்ளே வச்சு லாடம் கட்டுனா வெளியே வெத்து வேஷம் போட்டு திரிவாங்களா?

நாலரை வருஷமா எதுவும் செய்யாமல் இதுங்களை எல்லாம் வேடிக்கை பார்க்கும் மோடி யை உங்களுடன் சேர்ந்து வண்மையாக் கண்டிக்கிறேன்!

  • திவ்யதர்ஷிணி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.