ஹிந்து கடவுள் சாத்தானா? கிறிஸ்துவ பள்ளி நாடகத்தை தடுத்து நிறுத்திய இந்து முன்னணி!

உள்ளூர் செய்திகள் சென்னை லைஃப் ஸ்டைல்
thiruvannamalai christianschool - 2026

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறில் அமைந்திருக்கும் சென் ஜோசப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் இந்து கடவுளை இழிவுபடுத்தும் வகையில் நாடகம் நடத்த இருந்ததும், இந்துக் கடவுளை சாத்தான் என்றும், ஏசுநாதர் இந்துக் கடவுளை பேய் விரட்டுவது போல விரட்டி விடும் வகையில் காட்சி அமைத்து நாடகம் நடத்த இருந்ததும் உள்ளூர் இந்து முன்னணியினருக்கு தெரியவந்தது.

தகவலறிந்த இந்து முன்னணியினர் பள்ளிக்கு விரைந்து சென்று அந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் காவல்துறையிடம் புகார் கூறியும் அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் போலீஸில் புகார் கடிதம் கொடுத்தனர்.

முன்னதாக பள்ளி முற்றுகைப் போராட்டம் நடந்த போது,போலீஸார் அங்கே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து மோகன் ராஜ் என்பவர் செய்யாறு காவல் உதவி ஆய்வாளரிடம் அளித்த புகார் மனுல்…. ஐயா நான் மேற்கண்ட இயக்கத்தில் இந்து சமுதாய பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் இன்று மாலை 4 30 மணியளவில் செய்யாறு ஆற்காடு சாலையில் அமைந்திருக்கும் சென் ஜோசப் பள்ளியில் இன்று ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது

அந்நிகழ்ச்சியில் இந்து கடவுள் சாத்தான் என்று கூறி நாடகம் நடைபெற இருந்தது. தகவலறிந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் அந்தப் பள்ளிக்குச் சென்று பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தோம். மேற்படி நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை நாங்கள் தவறுதலாக ஏற்பாடு செய்துவிட்டோம் அதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என்றும், இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த மாட்டோம் என்றும் மேற்படி பள்ளி நிர்வாகமே ஒப்புக் கொண்டதால் இவர்கள் வேண்டுமென்றே இந்து மதத்தையும் இந்து கடவுளையும் மத மோதலை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்துள்ளார்கள்

எனவே இந்து மதத்தையும் இந்து கடவுளை இழிவுபடுத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் பள்ளியின் தாளாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

தவறும் பட்சத்தில் மாவட்ட அளவில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

சிறுபான்மை என்ற சலுகைகளைப் பெற்றுக் கொண்டு, பெரும்பான்மை மதத்தையும் உணர்வுகளையும் கலாசாரத்தையும் கடவுளையும் இழிவு படுத்தும் இது போன்ற கேவலங்கள் வேறு எந்த நாட்டிலும் நடக்காது என்று பொருமித் தள்ளினர் அங்கிருந்த பொதுமக்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.