
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதைஅடுத்து தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது .
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 716 பேருக்கு (ஆண்கள் 427, பெண்கள் 288, திருநங்கை 1) கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்துள்ளது என்றுசுகாதாரத்துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது
இன்று சென்னையில் மட்டும் 510 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப் பட்டது. அடுத்து சென்னையை ஒட்டிய மாவட்டங்களான செங்கல்பட்டில் 35 பேருக்கும், திருவள்ளூரில் 27 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 24 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 36 பேருக்கும், பெரம்பலூரில் 27 பேருக்கும், திருவண்ணமலை மாவட்டத்தில் 13 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டது.



