பாக்கெட் உள்ள சட்டை போட்டாதானே போலீஸு லஞ்சம் வாங்குது..? அதனால…

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
kenyapolice - 2026

பாக்கெட் வைத்திருக்கும் சட்டை சீருடை அணிந்தால்தானே போலீசார் லஞ்சம் வாங்கி பாக்கெட்டை நிரப்பிக் கொள்கிறார்கள். அதனால், கென்யா அதிபர் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்

அதன்படி ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக கென்யா அதிபர் வித்தியாசமான ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்! கென்யாவில் போலீசாரின் சீருடையில் பாக்கெட் இல்லாமல் இனி வழங்கப்படும் என்பதுதான் அந்த திட்டம்! இது விரைவில் அமலுக்கு வர உள்ளது!

kenya president - 2026

தற்போது போலீசாருக்கு வழங்கப்பட உள்ள புதிய சீருடைகளில் பாக்கெட் எதுவும் இருக்காது! இது நடைமுறைப்படுத்தப்பட்டால் கென்யா காவல்துறை அதிகாரிகள் சாலைகளில் லஞ்சம் வாங்கி பாக்கெட்டை நிரப்ப முடியாது என்று நம்பப்படுகிறது

அவர்கள் வசூல் செய்யும் பணத்தை சரியானபடி டப்பாவில் மட்டுமே சேகரிக்க முடியும்! ஆனால் காவல்துறை அதிகாரிகள் இந்த நடைமுறைக்கு மறுப்பு தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது! அதற்குக் காரணம் சீருடைகள் வைத்து தைக்கப்பட்ட சீருடை தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்!

1 thought on “பாக்கெட் உள்ள சட்டை போட்டாதானே போலீஸு லஞ்சம் வாங்குது..? அதனால…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.