December 6, 2025, 5:38 PM
29.4 C
Chennai

அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பலி..

vikatan 2022 09 61f2a027 36bc 472a a1bf 51bd1c069368 67a6ca21 0023 47f8 b1fd e0eed7cb636b - 2025

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆஸ்பயர்-2 என்ற கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. தனியாருக்கு சொந்தமான இந்த கட்டடத்தில் வழக்கம் போல் கட்டட பணியாளர்கள் பணியில் இருந்தப் போது திடீரென அந்த லிஃப்ட் அறுந்து விழுந்துள்ளது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் நபர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சம்பவமானது காலை 7.30 மணியளவில் நடந்துள்ளது. ஆனால் இந்த விபத்து குறித்து கட்டடத்தின் உரிமையாளர் போலீசாருக்கு 11 மணியளவில் தகவல் தெரிவித்ததாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டடத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சஞ்சய் பாபுபாய் நாயக், ஜெகதீஷ் ரமேஷ்பாய் நாயக், அஷ்வின்பாய் சோமாபாய் நாயக், முகேஷ்பாய் பாரத்பாய் நாயக், முகேஷ் பாரத்பாய் நாயக், ராஜ்மல் சுரேஷ்பாய் கராடி, பங்கஜ்பாய் சங்கர்பாய் கராடி உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 8 பேரும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள்; மேலும் அவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். இந்நிலையில் கட்டடத்தில் வேலை செய்த ஊழியர்களின் உறவினர்கள், விபத்து நடந்தவுடன் ஏன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை? ஏன் தாமதமாக தெரிவித்தனர்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

7bfa91df3a1aec7b5b971e4bafb4bbcf - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories