
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பைக்கான தேசிய எறிபந்து போட்டியில் தமிழக மகளிர் அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது!
விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாது நடந்த இறுதிப் போட்டியில், கேப்டன் வர்ஷா தலைமையிலான வீராங்கணைகள் 15 – 10 ; 15- 12 என்ற கணக்கில் மத்தியப் பிரதேச அணியைத் தோற்கடித்தனர்.
கேப்டன் வர்ஷா, நிவேதிதா, காயத்ரி உள்ளிட்டோரின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி இந்த வெற்றிக்கு பெரிதும் உதவியதாக தமிழக அணியினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இப்போட்டியில் பங்கேற்ற தமிழக ஆடவர் அணியினர் வெங்கலப் பதக்கம் வென்றனர்.

தமிழக மகளிர் அணியினர் மேற்கு வங்க அணியுடன் மோதிய போட்டியில் 15-10. 16-14 என்ற கணக்கிலும், மத்தியப் பிரதேசத்துடனான போட்டியில் 15-10, 15-12 என்ற கணக்கிலும், ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் 15-11, 15-6 என்ற கணக்கிலும், கர்நாடக அணியுடனான போட்டியில் 15-10.15-8 என்ற கணக்கிலும் புதுச்சேரி அணியுடனான போட்டியில் 15-2. 15-0 என்ற கணக்கிலும் தோற்கடித்தனர்.
ஆடவர் அணியினர் மேற்கு வங்கத்துடனான போட்டியில் 15-3, 15-1 என்ற கணக்கிலும் ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் 15-7, 15-6 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றனர். ஆயினும், மத்தியப் பிரதேசத்துடனான போட்டியில் 8-15, 13-15 என்ற கணக்கிலும், கர்நாடகத்துடனான போட்டியில் 14-15, 10-15 என்ற கணக்கிலும் தோல்வி அடைந்தனர்.