உலகே பொய்; வாழ்வே பொய்; எல்லாம் பொய்! தத்துவவாதி ஆகிவிட்ட ராகுல்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
rahul cag report question - 2026

இந்த உலகமே பொய், வாழ்வே பொய், நீயும் பொய், நானும் பொய், அம்மா பொய், அப்பா பொய், பாட்டி பொய்… அக்கா பொய், நாடே பொய்.. எல்லாம் பொய் என்று உலகை உணர்ந்து கொண்ட தத்துவப் பேரறிஞர் ஆகியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்!

உச்ச நீதிமன்றம் பொய் சொல்கிறது..
முன்னாள் ஏர் மார்ஷல் பொய் சொல்கிறார்
தற்போதைய ஏர் மார்ஷலும் பொய் சொல்கிறார்
பிரான்ஸ் அதிபர் பொய் சொல்கிறார்
மத்திய அமைச்சர் பொய் சொல்கிறார்
மோடி பொய் சொல்கிறார்
இப்போது…
சிஏஜி அறிக்கையும் பொய்தான்!
எல்லோரும் பொய் சொல்கிறார்கள் என்று… சொல்பவர் பிணையில் சுற்றிக் கொண்டிருக்கும் சத்தியவாதி கலியுக அரிச்சந்திரன்!

கிட்டத்தட்ட உலகியல் வாழ்க்கையில் விரக்தி நிலைக்கு வந்து, முற்றும் துறந்து வாழும் ஒரு சாமியாரின் நிலைக்கு வந்துவிட்டாரோ என்று சந்தேகப் படும் அளவுக்கு, அவருக்கு எல்லாமே பொய்யாகத் தெரிகிறது.

இன்று சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட பின்னர், தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்துகள் இவை…

சிஏஜி அறிக்கை பொய்யானது. இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி இடைத்தரகர் போல் செயல்பட்டார். உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியது

இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க கடமைப்பட்டவர். ரபேல் ஒப்பந்தத்தின் விவரங்கள் அனில் அம்பானிக்கு எப்படி தெரியும். தனக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்கப் போகிறது என்பது அம்பானிக்கு முன்கூட்டியே தெரிந்து இருந்தது. ஆனால் மனோகர் பாரீக்கருக்கு தெரியாது… என்றெல்லாம் பேசினார்.

முன்னதாக சிஏஜி அறிக்கை எங்கே என்று கேட்டு வந்தார். அறிக்கையை அவர்கள் சமர்ப்பித்ததும், சிஏஜி அறிக்கையே பொய் என்று அடம் பிடிக்கிறார்.

3 thoughts on “உலகே பொய்; வாழ்வே பொய்; எல்லாம் பொய்! தத்துவவாதி ஆகிவிட்ட ராகுல்!”

  1. Looks like Rahul has lost his balance and fear haunted. He could not accept a normal citizen from lower class like Modiji as P.M. It is a psychological impact in every rich man that makes them very very jealous of any virtue of any poor man. He is frustrated and may indulge in violence or go mad at a later date.

  2. He has almost become mad. He is unable to digest honesty from Modi government. He barks like a dog at everything. He needs counselling and medical treatment. Looks frustrated having lost sleep for a long period.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.