கட்டண உயர்வில்லா ரயில்வே பட்ஜெட்: தாக்கல் செய்தார் சுரேஷ் பிரபு

இந்தியா

புது தில்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக., அரசு பொறுப்பேற்ற பின்னர், இன்று தனது 2-வது ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.

இன்று காலை நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் உரையில் அவர் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த பட்ஜெட் போன்றே இந்த பட்ஜெட்டிலும் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு ஏதும் இடம்பெறவில்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தடங்களில் புதிய ரயில்களை இயக்கிய பின்னரே புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் என்று அப்போது விளக்கம் கூறப்பட்டது. அந்த வகையில், இந்த பட்ஜெட்டிலும் புதிய ரயில்களுக்கான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை!

இந்த ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளின் பாதுகாப்பு, ரயில்வே பயணிகளுக்கான வசதிகளில் முக்கியத்துவம் கொடுத்தல், ரயில் பெட்டிகளை மேம்படுத்துவது, ரயில்களில் இணையதள வசதி அளிப்பது, ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை அதிகரிப்பது, ரயிலில் “பயோ டாய்லெட்’ அமைத்தல், சூரிய மின்சக்தியைப் பயன்படுத்துதல், மின்மயமாக்கல், எல்இடி விளக்குகள் பயன்பாட்டை அதிகரித்தல், எப்.எம். வானொலி உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.