கடலூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை வெட்டிக் கொலை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை

cuddalore teacher murder - 2026

கடலூர் : கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியில் ஆசிரியை ரம்யா என்பவரை பள்ளி வளாகத்தில், மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளியில் ஆசிரியை வகுப்பறையில் வெட்டிக்கொலை செய்யப் பட்டுள்ளார். வழக்கம்போல பணிக்கு வந்த ஆசிரியை ரம்யாவை வெட்டிக்கொலை செய்துவிட்டு காதலன் என்று கூறப் படுபவர் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.  பள்ளி வளாகத்திலேயே இப்படி ஒரு கொலைச் சம்பவம் நிகழ்ந்தது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.