முந்தைய மத்திய அரசு, மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவே ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை என்ற பெயரில் ரூ.50 லட்சம் லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: ஜாகிர் நாயக்கின் தேசவிரோதச் செயல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக வழங்கப்பட்ட லஞ்சத் தொகையே அந்த ரூ.50 லட்சம். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின்போது, ஜாகிர் நாயக்கைப் பாதுகாப்பதற்காக அரசுக்குள்ளேயே ஒரு தரப்பினர் செயல்பட்டு வந்தனர். ஜாகிர் நாயக் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அந்த அரசே கவலை தெரிவித்த நிலையில், அப்போதே ஏன் அந்தத் தொகையை திருப்பி அளிக்கவில்லை?
ஜாகிர் நாயக் இஸ்லாமிய சான்றோர் எனவும், அவருக்கு அரசுப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் முன்னாள் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாயக்குக்கு ஆதரவாக காங்கிரஸில் பலர் பேசியுள்ளனர் என்றார் அவர்.
ஜாகிரைப் பாதுகாப்பதற்கான லஞ்சம்: ரவி சங்கர் பிரசாத்
Popular Categories



