“பயங்கரவாதத்தைப் பரப்புபவர் என்று முத்திரை குத்தும் அளவுக்கு என்ன குற்றம் செய்தேன்?’ என்று ஜாகிர் நாயக் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து வெளிநாட்டிலிருந்து அவர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 25 ஆண்டுகளாக நான் மதபோதனை செய்து வருகிறேன். ஆனால் இப்போதுதான் என் மீது “பயங்கரவாதத்தைப் பரப்புபவர், டாக்டர் பயங்கரவாதம்’ என்றெல்லாம் முத்திரை குத்தப்படுகிறது.
மிகத் தீவிரமாக விசாரணை செய்தும், என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், மீண்டும் விசாரணை நடத்த வலியுறுத்தப்படுவது ஏன்? என்று அந்தக் கடிதத்தில் ஜாகிர் நாயக் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்ன குற்றம் செய்தேன்?: ஜாகிர் நாயக் கேள்வி
Popular Categories



