டிடிவி.,யிடம் இருந்து விலகி திமுக.,வில் இணைந்த வி.பி.கலைராஜன்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

vpkalairajan - 2026

அமமுகவில் இருந்து நேற்று நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன், திருச்சியில் திமுக., தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுக.,வில் இணைந்தார்.

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தான் சரியானது, அதனால் திமுகவில் இணைந்தேன்  என்று கூறினார் வி.பி.கலைராஜன்! மேலும், டிடிவி தினகரனுடன் எனக்கு முரண்பாடு ஏதும் கிடையாது என்றும் கூறினார் வி.பி.கலைராஜன்!

முன்னதாக, அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் விபி கலைராஜன் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி வி.பி.கலைராஜனை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டார்.

விபி கலைராஜன் திமுக.,வில் சேர்வதற்கான முன்னேற்பாடுகளை எடுத்த நிலையில், இதனை அறிந்து டிடிவி அவ்வாறு நீக்கியதாக அக்கட்சியினர் தகவல் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.