
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மூவேந்தர் பேரவை சார்பில் 16ம் ஆண்டு மாட்டுவண்டி குதிரை வண்டி பந்தயம் நடந்தது.
பந்தயம் பெரியமாடு கரிச்சான்மாடு நடுக்குதிரை நடுமாடு பூஞ்சிட்டுமாடு சிறிய குதிரை என 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பந்தயம் நடந்தது.
பெரியமாடு பந்தயத்தில் முதல்பரிசை புதுக்கோட்டை மாவட்டம் தினையாகுடி சிவா வண்டியும்,
கரிச்சான் மாடு பந்தயத்தில் முதல்பரிசை புதுக்கோட்டை மாவட்டம் பொன்பேத்தி மருதுபாண்டி வெள்ளாளதேவர் வண்டியும்
நடுக்குதிரை பந்தயத்தில் முதல்பரிசை புதுக்கோட்டை மாவட்டம் செந்தில்பாலா வண்டியும்
நடுமாடு பந்தயத்தில் முதல்பரிசை ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பிபட்டிணம் முகமது வண்டியும்
பூஞ்சிட்டு மாடுபந்தயத்தில் முதல்பரிசை புதுக்கோட்டை மாவட்டம் கே புதுப்பட்டி அம்பாள் வண்டியும்
சிறிய குதிரை பந்தயத்தில் முதல்பரிசை புதுக்கோட்டை செந்தில் பாலா வண்டியும் பெற்றது பந்தயத்தை காண பல ஆயிரம் பேர் சாலையின் இருபுறமும் காத்திருந்து ரசித்தனர்.
விழாவை காண பட்டுக்கோட்டை சாலையின் இருபுறமும் பல ஆயிரம் ரசிகர்கள் பந்தயத்தை கண்டு ரசித்தனர்.விழாவை முன்னிட்டு அறந்தாங்கி டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்;டனர்.
விழா ஏற்பாடுகளை நெற்குப்பம் பெரியகருப்பன், மையவயல் காளிதாஸ், செல்வனேந்தல் சுந்தர்ராஜன்,குமரன் சேகர், பிள்ளைவயல் பஞ்சநாதன், சித்ரவேலு சங்கிலிமுத்து கருப்பையா நம்பர் 1 கருப்பையா, தாந்தாணி அறிவழகன் அழியாநிலை மதன்மோகன் ஆகியோர் செய்தனர்.



