ஸ்டாலினை கைது செய்திருப்பேன்: சுப்பிரமணியம் சுவாமி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்

subramanian swamy - 2026subramanian swamy - 2026

திமுக தலைவர் ஸ்டாலினை கைது செய்திருப்பேன் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி!கூறியுள்ளார்.

தி.மு.க. வெளியிட்டுள்ள 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், மீண்டும் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவோம் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் ட்விட்டரில் சிலர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “தி.மு.க.வுக்கு அறிவு என்பதே இல்லை. சேது சமுத்திர திட்ட விவகாரம் உச்சநீதிமன்றத்தால் மூடப்பட்டுவிட்டது. என் ஆலோசனைப்படி, ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக மோடி அறிவித்திருந்தால், பழங்கால சின்னங்களை அவமதித்த குற்றச்சாட்டில் மு.க.ஸ்டாலினை கைது செய்ய வைத்திருப்பேன்” என்று காட்டமாகப் பதிலளித் துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.