பாஜக.,வில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பிர்!

Published:

gowdam ghambir - 2026

முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் பாஜகவில் இணைந்தார்! அவர் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கௌதம் காம்பீர் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்

கட்சியில் இணைந்த பிறகு காம்பீர் இது குறித்து கூறிய போது நான் பாஜகவில் இணைகிறேன்! பிரதமர் நரேந்திர மோடியின் கனவுகள் மற்றும் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன். இந்த வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டுள்ளதற்காக நான் பெருமை கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்

பாஜக வட்டாரத்தில் இது குறித்து கூறிய போது புது தில்லி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து கௌதம் காம்பீர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்கின்றனர். தற்போது இந்தத் தொகுதியில் பாஜக.,வின் மீனாட்சி லேகி உறுப்பினராக உள்ளார்!

இது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்ற நிலையில் பாஜக வட்டாரங்கள் இவ்வாறு கூறுகின்றன! அண்மையில் கௌதம் காம்பிருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது! இந்த வருடத்தின் தொடக்கத்தில் நரேந்திர மோடி கௌதம் காம்பீருக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img