செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் வல்லமை பெற்ற 4வது நாடு இந்தியா! மோடி ‘பெருமித’ அறிவிப்பு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modiji 1 - 2026

இன்று காலை 12 மணிக்கு மேல், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். ஊடகங்கள் மூலம் அவரது உரை ஒளிபரப்பானது. வானொலி, தொலைக்காட்சி, டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் அவரது உரை ஒளிபரப்பானது.

அந்த உரையில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

விண்ணில் செயற்கைக்ளோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் சோதனை இன்று வெற்றி அடைந்துள்ளது  என்று கூறிய பிரதமர் மோடி இந்தியாவின் செயற்கைக் கோள்களை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர பிற நாடுகளுக்கு எதிராக சோதனை அல்ல என்றார்.

விண்ணிலேயே செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களில் வெற்றி  பெற்றதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, மிஷன் சக்தி என்ற சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது! விண்வெளித்துறையில் உலகின் 4வது சக்தி மிகு நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்த சோதனையை இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளே செய்துள்ளன. நாம் நமது சொந்த செயற்கைக்கோளையே சுட்டு வீழ்த்தியுள்ளோம்! இதன் மூலம் இந்த வல்லமை பெற்ற நாட்டின் வரிசையில் 4வது நாடாக நாம் இணைந்துள்ளோம் என்று கூறினார் பிரதமர் மோடி!

பூமிக்கு 300 கி.மீ. உயரத்தில் ஒரு செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தியுள்ளது இந்தியா! அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்த தொழில்நுட்பத்தை இந்தியா மட்டுமே கொண்டுள்ளது!

இந்த செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை எந்த நாட்டுக்கும் எதிரானது கிடையாது! இந்த திட்டத்திற்கு மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்டதாகவும் அவர் அறிவித்தார்.

முன்னதாக, இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.