கனிமொழி வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைப்பு! திமுக.,வினர் அதிர்ச்சி!

சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்

kanimoshi karuna - 2026

பி-2 படிவத்தை சரியாக நிரப்பாத காரணத்தால் திமுக வேட்பாளர் கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது திமுக.,வினர் மத்தில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தர்ராஜனும் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. அதில், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு மீதான பரிசீலனை பகல் 2 மணி வரை நிறுத்திவைக்கப்பட்டது.

பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால், இவரது வேட்பு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும்,
படிவம் “அ” வில் சேப்பாக்கத்தில் தான் வாக்காளர் எனவும்

படிவம் “ஆ ” வில் தூத்துகுடியில் வாக்காளர் எனவும் குறிப்பிட்டுள்ளார்

பா.ஜ.க வழக்கறிஞர்கள் எழுத்து மூலமான ஆட்சேபனை
தெரிவித்தனர். இதை அடுத்து
உரிய விளக்கம் அளிக்க மதியம் 2.00 வரை திமுக தரப்புக்கு கெடு விதிக்கப் பட்டது.

1 thought on “கனிமொழி வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைப்பு! திமுக.,வினர் அதிர்ச்சி!”

  1. கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனு மீதான பரிசீலனை செய்ததில்,
    படிவம் “அ” வில் சேப்பாக்கத்தில் தான் வாக்காளர் எனவும்
    படிவம் “ஆ ” வில் தூத்துகுடியில் வாக்காளர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
    பொய் சொல்லியே பொழப்பு நடத்தும் இவரின் வேட்புமனுவை ரத்து siyavendum.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.