பெரும் அறிவிப்பு என மோடி சொன்ன விஷயம் இதுதான்!

modispeech - 2026

பெரும் அறிவிப்பு என மோடி சொன்ன விஷயம் இதுதான்..

இந்தியா தன் அதிநவீன செயற்கை கோள் எம்சாட் என்பதை அடுத்தமாதம் 1ம் தேதி விண்ணுக்கு செலுத்துகின்றது, அது மிக நவீனமானது..

29 செயற்கைகோளுடன் செலுத்தபடும் அந்த கோள் விண்ணில் 7563 கிமீ தூரத்தில் நிலைநிறுத்தபடும் இதில் இருந்து மிக நுட்பமாக விளக்கபடும்..

அதில் மிக மிக நவீன வசதிகள் உண்டு, நடமாட்டம் மட்டுமல்ல அது போக அணு ஆயுத ரகசியம், சிக்கல் என்றால் எலக்ட்ரானிஸ் விஷயங்களை கட்டுபடுத்தும் நுட்பம் என நிறைய உண்டு..

தீவிரவாதிகளின் தகவல் தொடர்பை இடைமறிப்பது, கோடிங் டிகோடிங்கை நொடியில் செய்வது என ஏக விஷயங்கள்..

விமான கடத்தல் போன்ற விஷயங்களில் இது பெரும் கைகொடுக்கும், யுத்தம் என்றால் ஆயிரம் அலாவுதீன் பூதத்திற்கு சமம்..

இதனால் இந்தியாவின் உளவுபார்க்கும் திறன் மட்டுமல்ல பாதுகாப்பும் பன்மடங்கு உயரும்..

இப்படியான செயற்கோளை விண்ணில் நிறுத்தினால் எதிரி நாடு சும்மா இருக்குமா?

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இருக்கும் , எப்பொழுது இருக்குமென்றால் செயற்கைகோளை தகர்க்கும் ஏவுகனைகள் அந்நாட்டில் இருந்தால் இருக்கும் இல்லாவிட்டால் தகர்த்துவிடும்…

அமெரிக்கா ரஷ்யா, சீனா என மூன்று நாடுகளிடமும் இது உண்டு..

விண்வெளி என்பது ஆதிக்கபோட்டி நடக்குமிடம், ஒரு செயற்கைகோளை தகர்க்க பல கட்டங்களை தாண்ட வேண்டும்..

லேசர் போன்ற கதிர்களாலே ஏவுகனையினை பொசுக்கும் நுட்பமெல்லாம் அங்கு உண்டு, அதை எல்லாம் சமாளிக்கும் வண்ணம் ஏவுகனை செய்வது என்பது மகா சிக்கலானது..

விண்வெளியில் நடக்கும் சண்டை வெளிதெரியாது என்பதால் பல சொல்வதில்லை..

பலமுறை அமெரிக்க செயற்கை கோள் ரஷ்யாவினை உளவுபார்க்கும் பொழுது ரஷ்யா இப்படி உடைத்திருக்கின்றது..

அதைவிட முக்கியமாக விண்வெளியில் புல்டோசர் போல ஒன்றை சுற்றவைத்திருக்கின்றது ரஷ்யா, அதாவது ஒவ்வொரு நாடும் செயற்கைகோள் செலுத்தபடுவதால் அங்கும் குப்பை அதிகம்

குப்பை செயற்கை கோளை உடைக்கின்றேன் என ரஷ்யா வைத்திருக்கும் அந்த புல்டோசர் பலமுறை அமெரிக்க உளவு செயற்கை கோளை உடைத்தும் தள்ளியிருக்கின்றன‌..

இது போக செயற்கை கோளை தகர்க்கும் ஏவுகனைகளும் அவர்களிடம் உண்டு..

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

சமீபத்தில் அமெரிக்க உளவுசெயற்கை கோளை சீனா தகர்த்தது

தன் மிக அதிநவீன உளவு செயற்கை கோளை செலுத்தும் இந்தியா கவனமாக இருக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் இந்த ஏவுகனை சோதனை முடிவு இன்று அறிவிக்கபடுகின்றது..

மிஷன் சக்தி எனும் அச்சோதனையில் அக்னி 5 ரக ஏவுகனை பயன்பட்டிருக்கலாம் என்கின்றார்கள்..

சுருக்கமாக சொன்னால் தங்கம் வாங்குவது பெரிதல்ல அதை காக்க லாக்கர் வேண்டாமா? குறைந்தபட்சம் வெட்டரிவாளாவது வேண்டாமா?

அதுதான் இது..

நிச்சயம் மிகபெரும் விஷயம் இது, ராணுவத்திற்கான உளவு செயற்கைகோளை செலுத்துவதும் அதை காக்க செயற்கைகோளை தகர்க்கும் ஏவுகனையினை செலுத்துவதும் மாபெரும் விஷயம்..

உலகில் நாம் 4ம் இடத்தில் இருக்கின்றோம் என்றாலும் இஸ்ரேலும் களத்தில் உண்டு..

இந்தியா இதனால் உலகின் மிகபெரும் வலிமையான நாடாக மாறியிருக்கின்றது, மாபெரும் பாதுகாப்பினை தேசம் பெற்றிருக்கின்றது..

இது நமது செயற்கைகோளுக்கு பாதுகாப்பு மட்டுமல்ல, இந்தியாவினை உளவு பார்த்து கொண்டிருக்கும் சீன அமெரிக்க செயற்கை கோள்களுக்குமான எச்சரிக்கையும் கூட‌

இதெல்லாம் 1980லே உலகிற்கு வந்துவிட்ட விஷயங்கள், அன்றே இந்தியா இதனை பெறவேண்டும் என இந்திராவும் கலாமும் கனவு கண்டனர்

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

அவர்கள் தொடங்கிய திட்டம் மோடி காலத்தில் நடந்திருகின்றது

காலத்தில் பெற வேண்டிய பெரும் பாதுகாப்பினை தேசம் பெற்றிருக்கின்றது..

அரசியல் தேர்தல்களை தாண்டி ஒவ்வொரு இந்தியனும் பெருமைபட வேண்டிய நேரமிது..

  • ஸ்டான்லி ராஜன் 

misionsakthi - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories