பணபலத்தை நம்பியே திமுக தேர்தலில் போட்டி: எச்.ராஜா!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

hraja - 2026

பண பலத்தை நம்பியே திமுக தேர்தலில் போட்டியிடுவதாக பாஜக தேசிய செயலரும் சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான எச் ராஜா கூறியுள்ளார்.

துரைமுருகன் உதவியாளர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதன் மூலம், பண பலத்தை நம்பிதான் திமுக தேர்தலில் போட்டியிடுகிறது என்பது அம்பலமாகியுள்ளது என்று ஹெச்.ராஜா கூறினார்.

ஏற்கனவே சிவகங்கை தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் பணபலம் தான் தனக்கு சவால் என்று முன்னர் கூறியிருந்தார்

இந்நிலையில் இன்று காலை திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கல்லூரியில் நடைபெற்ற சோதனைகளில் பணம் பெருமளவில் கைப்பற்றப் பட்டுள்ளதை சுட்டிக்காட்டி திமுக பண பலத்தை நம்பியே தேர்தலில் போட்டியிடுவது வெட்டவெளிச்சமாகி உள்ளது என்று கூறியுள்ளார்.

#Duraimurugan | #DMK | #HRaja | #Elections2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.