மோடிக்கு எதிரான பொய்ச் செய்திகளால் களமாடிய காங்கிரஸ்! களையெடுத்த பேஸ்புக்..!

Published:

facebook under watch - 2026

மோடிக்கு எதிரான பொய்ச் செய்திகள், இந்தியாவுக்கு எதிரான தகவல்கள் என களமாடிய காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, பேஸ்புக் நிறுவனம் சந்தேகப் படும்வகையில் உள்ள பக்கங்களை எல்லாம் நீக்கியிருக்கிறது.

இது தொடர்பில், காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலில் திறக்கப்பட்ட 687 பக்கங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 138 பக்கங்கள், 549 பேஸ்புக் அக்கவுண்ட்கள் பேஸ்புக்கில் நீக்கப் பட்டுள்ளன. இவற்றில், 206000 பின்பற்றுபவர்கள் அதிகபட்சமாகவும், அதற்கு இணையாகவும் அதிகபட்ச பாலோயர்ஸுடன் பல பக்கங்கள் இருந்துள்ளன.

இவற்றில் 39 ஆயிரம் டாலர் அளவுக்கு விளம்பரத்துக்காக செலவும் செய்து, பக்கங்களை பிரபலப் படுத்தியுள்ளனர். இவற்றில் முதல் விளம்பரம், ஆக.2014லும் கடைசியாக விளம்பரம் மார்ச் 2019லும் வெளியிடப் பட்டிருக்கிறது. இவை அனைத்துமே, இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்தப் பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் தலையிட்டுள்ளது என்றும் அதிபர் டிரம்ப் தேர்தலில் நின்ற போது, அவருக்கு ஆதரவான கட்டுரைகளை பேஸ்புக் மக்களிடம் அதிகம் கொண்டு சென்றது என்றும், இதற்கு பின் ரஷ்யா இருப்பதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது பின்னர் நிரூபிக்கப்பட்டது!

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

இந்நிலையில், பேஸ்புக் கடந்த வருடமே இதுகுறித்து முக்கிய விஷயம் ஒன்றை தெரிவித்திருந்தது. அதன்படி இனி எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் பேஸ்புக் கட்டுப்பாடுகளை விதிக்கும். பேஸ்புக்கில் முறையின்றி இயங்கும் கணக்குகள் முடக்கப்படும். தேர்தல் நேரத்தில் தவறான தகவல்களை பரப்பும் பொய்யான கணக்குகள், பக்கங்களை முடக்குவோம் என்றது பேஸ்புக் நிறுவனம்!

இந்நிலையில் இந்திய அரசும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சில கட்டுப் பாடுகளை விதித்தது. .அதன்படி, நடவடிக்கை எடுத்துள்ள பேஸ்புக், தேர்தலை முன்னிட்டு பல நூறு பேஸ்புக் கணக்குகளை முடக்கியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பான 687 பக்கங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் பக்கங்கள் பல பொய்யான செய்திகளை பரப்பியதாகவும், தவறான போலி கணக்குகளை கொண்டு இருந்ததாகவும் பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது! இது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. அதேபோல் பாஜகவினர் தொடங்கிய சில பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

ஆனால், பெரும்பாலானவை குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸின் ஐடி., பிரிவு தொடங்கிய 687 கணக்குகள் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் என்பது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றில் பெரும்பாலான பக்கங்கள் பாகிஸ்தானில் இருந்து தொடங்கப்பட்டு நடத்தப் பட்டவை. ஆனால் அவற்றின் விளம்பரத்துக்கான தொகைகள், இந்திய ரூபாயில் பேஸ்புக் நிறுவனத்துக்கு செலுத்தப் பட்டிருக்கின்றன என்பதும், பாகிஸ்தானியர் பெயர்களில் உள்ள சில பக்கங்களில், காங்கிரஸின் விளம்பரங்கள் ஓடியுள்ளன என்பதும் இந்திய தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img