ராமநாதபுரத்தில் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிப்பு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

nainar nagendiran - 2026

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக நரேந்திரமோடி சிந்தனை பேரவை அகில பாரத பொதுச் செயலாளர் ராம்கோபால் ரத்னம் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதி ராமநாதபுரம் தொகுயில் அடங்கும்.

இங்கு பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்தில் ஓட்டுக் கேட்கும் பணி நடந்தது.

வீடு வீடாக வாக்கு கேட்கும் பணியில் அதிமுக நிர்வாகிகள் ஆதிமோகன், பார்த்திபன், மாறன் பாஜக நிர்வாகிகள் பாலு, ஜெயபாண்டியன், தீபன், திருமலை கணேசன், நாகராஜன், முன்னிலையில் குட்டைக் குளக்கரையில் உள்ள வீடுகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது ராம் கோபால் ரத்தினம் பேட்டியளித்தபோது,

வாக்களிக்கும் மக்களை நேரடியாக சென்று பார்த்து பேசி மோடியின் சாதனைகளை சொல்லி … செய்துள்ளதை சுட்டிக்காட்டி  வாக்கு கேட்கிறோம்.எத்தனையோ பேர் சொன்னார்கள்… ஆனால் நாம் சொன்னோம் … செய்தோம்.!

கமிசன் இன்றி ..  இடைத்தரகர் இன்றி கேஸ் கொடுத்திருக்கிறோம் வீடுகட்டிக் கொடுத்திருக்கிறோம் அதைச் சொல்லி வாக்கு  கேட்கிறோம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.