
இந்து சமயத்தில் கர்மம் அல்லது வினைப்பயன் என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு.
அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு ‘கர்மா’ சென்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் “வினைப்பயன்” என்றும் கூறுவர்.
ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான். கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது.
நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. இவ்விதம் கர்மாவை உணர்ந்து திருந்தி வயதானவரிடம் மன்னிப்பு கேட்ட மனிதரின் செயல் இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஆண் , மற்றும் பெண் இருவரும் சாலையின் ஓரத்தில் சண்டையிட்டு கொண்டிருக்க சாலையில் நடுவே வயதானவர் ஒருவர் பழங்களை வாங்கிக்கொண்டு நடந்து வருகின்றார்.
வரும் வழியில் அவரது கைப்பையில் இருந்த பழங்கள் கீழே விழுந்து சிதறியது. இதனை சண்டையின் நடுவே பார்த்த பெண் அவருக்கு உதவி செய்யுமாறு இளைஞரிடம் கூற அவரோ கோபத்தில் உதவ வரவில்லை.
பெண் உடனே சென்று பையில் பழங்களை எடுத்து கொடுத்து உதவி செய்கின்றார். இதனை பார்த்துக்கொண்டிருந்த இளைஞர் கோபத்தில் திட்டியவாறு வயதானவரின் அருகில் வர இளைஞர் நின்று கொண்டிருந்த இடத்தின் போஸ்டின் மேலே உள்ள மிகப்பெரிய பலகை ஒன்று கீழே விழுந்தது.
நல்வாய்ப்பாக இளைஞர் நகர்ந்து வந்து விட்டார். இதனை பார்த்ததும் தனது தவறை உணர்ந்த இளைஞர் உடனே மூதாட்டியின் நெற்றியில் முத்தமிட்டு தனது தவறை உணர்ந்தார். இந்த வீடியோ பலரின் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.