மும்பை டூ ஹைதராபாத்… தீயில் எரிந்து நாசமான பஸ்!

Published:

bus fire - 2026

மும்பை டு ஹைதராபாத். தீயில் எரிந்து சாம்பலான ஆரஞ்சு பஸ். கணத்தில் தப்பிய பாலம் போன்ற விபத்து. கோரமான தீவிபத்து கணத்தில் தப்பியது.

ஒன்றிணைந்திருந்த ஆந்திரப் பிரதேசத்தில் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள பாலம் அருகில் தேசிய நெடுஞ்சாலை மீது நடந்த சம்பவத்தை நினைவிற்கு கொண்டு வருவது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. 2013 ல் நடந்த பாலெம் பஸ் தீ விபத்தில் 45 பயணிகள் எரிந்து சாம்பலாயினர். ஏழு பேர்பலத்த காயமடைந்தனர்.

நேற்று டிரைவர் சரியான தருணத்தில் உடனடியாக செயல்பட்டதால் பெரும் விபத்து கணநேரத்தில் தப்பியது.

தெலங்காணாவில் உள்ள சங்காரெடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஆரஞ்சு டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த மல்டி ஆக்சில் பஸ்ஸில் தீப்பிடித்தது ஒரே நிமிடத்தில் பஸ் முழுவதும் விழுங்கி கபளீகரம் செய்து சாம்பலாக்கி விட்டது.

பெட்ரோல் பங்க் எதிரில் இந்த சம்பவம் நடந்தது அச்சத்தை ஊட்டியது. சங்காரெட்டி மாவட்டத்திலுள்ள ராமச்சந்திராபுரம் அருகில் தேசிய நெடுஞ்சாலை மீது வெள்ளிக்கிழமை காலையில் இந்த சம்பவம் நேர்ந்தது. வியாழக்கிழமை மாலை மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு கிளம்பிய இந்த பஸ் ராமச்சந்திராபுரம் அருகில் வந்தவுடன் தீ விபத்துக்குள்ளானது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

பஸ்சில் தீ பற்றி எரிந்தது. நெருப்பு ஒரே கணத்தில் பஸ் முழுவதிலும் பரவியது. விபத்து நேர்ந்தபோது பஸ்ஸில் 26 பேர் பயணிகள் இருந்தனர். முதலில் இன்ஜினில் இருந்து அடர்த்தியான புகை வெளிவந்ததால் டிரைவர் எச்சரிக்கை அடைந்தார் . உடனே பயணிகளை கீழே இறக்கி விட்டார். உடனுக்குடன் பகீரென்று பஸ் பற்றி எரிந்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே பஸ் முழுவதும் பரவியது. பிரயாணிகள் தம் லக்கேஜுகளை கீழே இறக்குவதற்கு கூட நேரம் இல்லாமல் போய்விட்டது.

நெருப்பு எத்தனை வேகமாக பரவியது என்பதை நாம் உணர முடியும். பயணிகள் கட்டிய துணியோடு நடுரோட்டில் நின்றார்கள். தேசிய நெடுஞ்சாலை மீது பெட்ரோல் பங்க் எதிரில் இந்த மிகப் பெரும் தீ விபத்து நடந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தீயணைப்பு படை வீரர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து சேர்வதற்குள் பஸ் முழுவதும் எரிந்து போய் விட்டது. செய்தி அறிந்த ராமச்சந்திராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தார்கள். தீயணைப்பு படையினரை அழைத்தார்கள்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

ஷார்ட் சர்க்யூட் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கும் என்று முதல் தகவல் தீர்மானித்தார்கள். மும்பையில் கிளம்பிய பஸ் எங்குமே நிற்காமல் பயணித்ததால் இன்ஜின் சூடாகி இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img