அம்பேத்கர் எழுதிய சட்டமா? முட்டாள் அரசியல் வாரிசுகள் எழுதிய சட்டமா!?

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

rahul gandhi 24 - 2026

தேச துரோக சட்டம் Sedition law [ 124a ] நீக்கப்படும் என்று தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறது காங்கிரஸ்.

பெரும் பெரும் ஊழல்கள் , மன்னர்கள் போல குடும்ப வாரிசு அரசியல் ஆகியவற்றை அடுத்து … நாட்டை அடுத்த சீரழிவை நோக்கி நகர்த்துவதான அறிவிப்பு இது .

புரட்சி என்கிற பெயரில் … இந்தியாவை துண்டு துண்டாக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிற உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுக்கு / குழுக்களுக்கு பெரிதும் உதவக் கூடிய அறிவிப்பு!

இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது ஏராளமான அடையாளங்களையும், தனித்துவங்களையும் இடியாப்ப சிக்கல்களாக கொண்டிருப்பது.

இத்தகைய அடிப்படையில் .. இந்தியாவிற்குள்..

உலக நாடுகளின் பூகோள அரசியலும், அண்டை நாடான பாகிஸ்தான் நிகழ்த்தும் மத அரசியலும், சீனா நிகழ்த்தும் அடையாள-கலாச்சார- வரலாறு அழித்தொழிப்பு அரசியலும் …ஒரு நாடாக இந்தியா அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கும் பெரும் சவால்கள்.

மேலும்…பிரிட்டிஷ் சட்டங்களை உதாரணமாக கொண்டு வரையறுக்கப் பட்டவை தான் இந்திய சட்டங்கள் என்றாலும்.. இந்திய சட்டங்களில் பெரும்பாலானவை ..தெளிவாக வரையறுக்கப் படாமல்..vague definition கொண்டவை . இந்தியாவின் பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டே… இத்தகைய vague definition கொண்ட சட்டங்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றன.

ஆகையால்..இந்திய குற்றவியல் சட்டங்கள் முட்டாள்களால் எழுதப் பட்டவை அல்ல. முக்கியமாக … அடிப்படை புரிதல்கள் கூட இல்லாத அரசியல் வாரிசுகளால் எழுதப் பட்டவையும் அல்ல.

காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை நீக்குவதில் தவறில்லை. சட்டங்கள் தவறாக பயன்படுத்தப் படக்கூடாது என்று சொல்வதிலும் தவறில்லை.

அதே நேரம் …இந்தியாவை பலவீனமாக்கி..இல்லாமலாக்கும் இத்தகைய முட்டாள்தனமான வாக்கு வங்கி அரசியல்கள் தடுக்கப்படவேண்டும்.

இந்த ஒரு அறிவிப்பிற்காகவே…இத்தகைய கட்சிகள் தோற்கடிக்கப் படவேண்டும்.

– பானு கோம்ஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.