தமிழ்நாடு குறித்த ‘லயோலா’ கணிப்பை… சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்

loyola college 1 - 2026

சற்று முன் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் பண்பாடு மக்கள் தொடர்பகம் என்ற லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்க் கணிப்பின் முடிவுகளை வெளியிட்டார்.

அவர்கள் கணிப்பின்படி திமுக கூட்டணி 27 முதல் 33 இடங்களைப் பெறும்

இந்த அமைப்பு நடத்தும் கருத்துக் கணிப்புகளின் நம்பகத்தன்மையை மதிப்பிட அவர்கள் 2016 சட்டமன்றத் தேர்தலின் போது நடத்திய கருத்துக் கணிப்பை எடுத்துப் பார்த்தேன்
அதில் அவர்கள்….

– சட்டமன்றத் தேர்தலில் திமுக முன்னிலை பெறும்
– நான்காண்டுகால அதிமுக ஆட்சி மோசம் எனப் பெரும்பாலோர் கருதுகிறார்கள்
– அடுத்த முதல்வராக தகுதி உள்ளவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கருணாநிதியும் இரண்டாம் இடத்தில் ஜெயலலிதாவும் இருக்கிறார்கள் – எனத் தெரிவித்திருந்தது

ஆனால் தேர்தல் முடிவுகள் என்ன என்று எல்லோருக்கும் தெரியும்!

முக்கியமான பின் குறிப்பு:

இன்று முதல் ஊடகங்களில் கருத்துக் கணிப்பு எட்டாம் தேதிவரை வெளியாகும். ஏனெனில் முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கும் 48 மணி நேரத்திற்கு முன்பு வரைதான் கருத்துக் கணிப்புக்களை வெளியிட முடியும்.

தமிழ்நாட்டில் 18 ஆம் தேதிதான் வாக்குப் பதிவு என்றாலும் உ.பி, பீகார், வங்கம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப் பதிவு 11ஆம் தேதி தொடங்குகிறது எனவே 8 ஆம் தேதி வரைதான் கருத்துக் கணிப்புக்களை வெளியிட முடியும்

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை 8 ஆம் தேதிக்கும் 18 ஆம் தேதிக்கும் இடையே 10 நாட்கள் இருக்கின்றன. எட்டாம் தேதி வெளியாகும் கணிப்புகள் அதிக பட்சமாக ஐந்தாம் தேதி வரை நடத்தப்பட்டிருக்கும். எனவே 10 முதல் 15 நாள் இடைவெளி இருக்கிறது. தேர்தலில் 15 நாள் இடைவெளியில் களப் பணிகளைப் பொறுத்து முடிவுகள் மாறக் கூடும்

எனவே இந்த முறை தமிழ்நாட்டைப் பற்றிய கருத்துக் கணிப்புக்களை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

Take it with a pinch of salt

– மாலன் நாராயணன் (பத்திரிகையாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.