ராகுல் பிறந்த நாள்; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

rahul modi - 2026

தனது 49வது பிறந்த நாளைக் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு, டுவிட்டரில், #HappyBirthdayRahulGandhi, Rahul Gandhi Ji, Rahulji என்ற ஹேஸ்டேக்குகள் டிரெண்டிங்கில் உள்ளது.

பிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவின்மூலம் ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தனது அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் பிறந்த நாளில், இந்தியர்களை ஈர்க்கும் விதமாக ராகுல் மேற்கொண்ட ஐந்து கட்டங்கள் என்று கூறி, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.