
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ஒழுக்கம், ஜிஎஸ்டி போன்ற கொள்கை முடிவுகளில் உறுதியாக எடுத்து வளர்ச்சியை உறுதிப் படுத்தியது என சிலவற்றில் பிரதமர் மோடியைப் புகழ்ந்துள்ளார் இன்ஃபோசிஸ் நிறுவுனர் நாராயண மூர்த்தி. மேலும், அடுத்த ஆட்சிக்காலத்திலும் இந்த அரசுதொடர வேண்டும் என்று தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ள நாராயண மூர்த்தி, பிரதமர் மோடி தலைமையிலான அரசில் ஊழல் இல்லை. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை மக்கள் அளிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது…
மத்திய அரசு மட்டத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க பிரதமர் மோடியும், அவரது அமைச்சர்களும் கடுமையாக உழைக்கின்றனர். மத்திய அரசு நிர்வாக மட்டத்தில் லஞ்ச புகார் குறித்து நான் அரிதாகவே கேள்விப்படுகிறேன். அவர் பிரதமராக தொடர்வது நாட்டுக்கு நல்லது. ஜி.எஸ்.டி., உள்ளிட்ட சில விஷயங்களை அமல்படுத்தும் போது ஏற்பட்ட குழப்பங்களுக்கு பிரதமர் மோடியை குற்றம் சுமத்துவது சரியல்ல.
இவற்றுக்கு அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடி போன்ற ஒரு தேசிய தலைவருக்கு மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இந்த அரசு தொடர வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளைப் பார்க்கும் போது, நாட்டைப் பற்றி கவலைப்படும், கட்டுப்பாடு குறித்து கவலைப்படும், சுத்தம் குறித்து கவலைப்படும் பொருளாதார முன்னேற்றம் குறித்து கவலைப்படும் ஒரு தலைவர் இருக்கிறார் என்பதை உணர முடிகிறது. இந்த அரசு தொடர்வது நல்ல விஷயமாகவே இருக்கும் என்று கூறினார்.
மேலும், ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்குமான பிரச்னைகள் குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த நாராயணமூர்த்தி, இரு தரப்பும் ஆர அமர பேசி சுமுகமான முடிவுக்கு வரவேண்டும். அனைத்து நிறுவனங்களும் பலமுடன் திகழ உறுதிப் படுத்த வேண்டும். நிறுவனங்களை பலவீனம் அடைய விடக்கூடாது. ஆனால், நேருவின் காலத்தில்தான் இது நடந்தது என்றார்.
நாராயண மூர்த்தியிடம், வளர்ச்சிக்கான வாக்குறுதிகளை அளித்த மோடி, பின்னர் சிலைகள் வைப்பதிலும் கோயில்களை புனரமைப்பதிலும் கவனம் செலுத்துகிறாரே என்று கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இவற்றை எல்லாம் தாம் ஒரு பொருட்டாகப் பார்க்கவில்லை என்று கூறினார்.




டிமானà¯à®¸à¯à®Ÿà®¿à®°à¯‡à®·à®©à¯ à®à®©à¯‹ நினைவில௠வரà¯à®•ிறதà¯.ஜி.எஸà¯.டி மூலம௠கà¯à®±à¯ தொழிறà¯à®šà®¾à®²à¯ˆà®•ள௠மறைநà¯à®¤à®¤à¯ அனைதà¯à®¤à¯ கà¯à®•à¯à®®à¯ ரிலையனà¯à®¸à¯ வெடà¯à®•à®®à¯