
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
ஏற்கெனவே திமுக தலைமை அலுவலகத்தில் இருந்த அண்ணாதுரை சிலை இன்று காலை அங்கிருந்து அகற்றப் பட்டது. அதற்கு பதிலாக அருகருகே கருணாநிதி, அண்ணாதுரை சிலைகள் நிறுவப்படும்.
சிலை திறப்பு விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



