நிதின் சத்யா தயாரிக்கும் புதிய படம்! வாணி போஜன் ஹீரோயினாம்!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

newfilm vanibhojan horz - 2026

நிதின் சத்யா தனது புது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்! அதில் அவர் …

உங்கள் ஆதரவோடு நடிகனாக அதிக அறிமுகமாகி பல படங்களில் நடித்து என்னை ஒரு நடிகனா நிலைநிறுத்தி வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு மறுபடியும் ஏதாவது செய்யணும் என்று நினைத்து தயாரிப்பாளர் இருக்கிறேன்

2018ல் என் தயாரிப்பு நிறுவனம் ஸ்வேத நிதின் சத்யா புரொடக்ஷன் ஹவுஸ் சார்பாக என் நண்பர் பத்ரி கஸ்தூரி துணையுடன் உருவான ஜருகண்டி படத்தை தயாரித்து வெளியிட்டேன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது

நடிகராக இருந்து தயாரிப்பாளராக உருமாறிய எனக்கு நீங்கள் அளித்த ஆதரவு பெரிய பக்கபலமாக இருந்தது இப்போது மறுபடியும் ஒரு புதுமுக இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் இயக்கத்தில் ஒரு படம் தயாரித்துக் கொண்டு இருக்கிறேன். இவர் பிரபல இயக்குனர் மோகன் ராஜா இடம் அசோசியேட் ஆக ஒர்க் செய்திருக்கிறார்

newfilm nitinsatya - 2026

முதல் படத்தில் என்னுடைய நல்ல நண்பர் ஜெய் நடித்தார் என் நெருங்கிய நண்பன் வைபவ் இந்தப் படத்தில் ஹீரோவாக செய்கிறார் முதல் முறை முழு நீள போலீஸ் ரோல் செய்கிறார். வாணி போஜன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஈஸ்வரி ராவ் பூர்ணா மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்

இந்தப் படம் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் என உருவாகிறது சென்னையில் படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது கூடிய விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார் நிதின் சத்யா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.