மதுரை தேரோட்டம் விமர்சையாகத் தொடக்கம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்

madurai ther festival - 2026

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது.

மதுரை நகரே திரண்டு சந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மையை வரவேற்று வீதியுலா வரவைக்கும் தேரோட்ட நிகழ்வு இன்று காலை தொடங்கியது.

சித்திரைத் திருவிழாவின் பதினோராம் நாளான இன்று அலங்கரிப்பட்ட திருத்தேர்களில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.பெருமானும் அம்பிகையும் எழுந்தருள, பல்லாயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

நான்மாடக் கூடல் நகர் எனும் பெயர் பெற்ற மதுரை நகரின் நான்கு மாசி வீதிகளிலும் தேர் பவனி நடக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.