காவித் துண்டு எந்தக் கட்சியின் கொடி? காவலர்களின் கயவாளித்தனம்!

Reporters Diary சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

saffron flag - 2026

காவி துண்டு போட்டுக் கொண்டு ஓட்டு போட போக கூடாது என தடுக்கிறார்கள் காவலர்கள்… என்று இந்து மத சிந்தனைகளில் ஊறிய சிலர் தங்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அயன் திருவாலீஸ்வரம் திருக்கோவில் அருகே தாங்கள் காவித் துண்டுடன் சென்ற போது, காவலர்கள் இவ்வாறு சென்று வாக்களிக்கக் கூடாது என்று தடுத்தார்கள் என்று கூறுகின்றனர் சில இளைஞர்கள். இதனைத் தங்கள் டிவிட்டர் பதிவுகளிலும் ஏற்றியுள்ளனர்.

காவித் துண்டு எந்தக் கட்சியின் கொடி ஆனது என்று கேள்வி எழுப்பும் அவர்கள், அது எந்தக் கட்சியின் அடையாளச் சின்னமும் அல்ல என்று கூறி மல்லுக்கு நின்று பின்னர் தங்கள் வாக்குகளை அளித்துள்ளனர்.

கடைசியாக காவி துண்டு போட்டுக் கொண்டு தான் போய் வாக்களித்தோம்…. என்ன சிறுது நேரம் கால தாமதம் ஆனது….

 

1 thought on “காவித் துண்டு எந்தக் கட்சியின் கொடி? காவலர்களின் கயவாளித்தனம்!”

  1. வண்ணத்தில் என்ன இருக்கு? மக்களின் எண்ணத்தில் தான் செயலில் தான் இருக்கு. எந்த வண்ணமும் கூடாது, பச்சை இஸ்லாமிய கட்சி, வெள்ளை கிறித்துவ மத சார்புள்ள ஆதரவு கட்சி, காவி வண்ணம் இந்துத்துவா கட்சி என்று தேசியக் கொடியின் புனித மூன்று வண்ணங்களையும் ஒவ்வொன்றாக தடை செய்யப் போகிறார்களா? கடைந்தெடுத்த முட்டாள் தனமாக தெரிகிறது. இதுதான் தேர்தல் நெறிமுறைகள் என்று வரைமுறையே இல்லாமல் செய்துவிட்டார்கள். மானத்தை மறைக்க ஆடையை கூட அணியமுடியாது போலிருக்கு. இவர்களை நம்பி வாக்கு அளித்தால் மக்கள் நிலை என்னவாகும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.