லாலு மகன் திருமண பந்தியில் அடிதடி ரகளை; உணவுப் பொருளை திருடிச் சென்றும் அடங்காத கூட்டம்!

Published:

lalu prasad yadav son tej pratap wedding - 2026


  • லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவ் திருமண நிகழ்ச்சியில் கடுங்கூட்டம்
  • பந்திக்கு முந்தி அடிதடி ரகளையில் ஈடுபட்ட மக்கள்
  • உணவு, உணவுப் பொருள்களை திருடிச் சென்ற விநோதம்
  • 7000 பேர் திருமணத்துக்கு எதிர்பார்க்கப் படுவதாக ஏற்பாட்டாளர்கள் கூறியிருந்த நிலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது

பாட்னா: லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவ் – ஐஸ்வர்யா திருமண வைபவம் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் பந்திக்கு முந்தி அடிதடி ரகளையில் ஈடுபட்டும், சிலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

பீஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தள எம்எல்ஏ., சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும், பாட்னா கால்நடை மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.இந்தத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, பரோலில் வெளியே வந்துள்ளார் லாலு பிரசாத் யாதவ்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

கான்பூரைச் சேர்ந்த சமையல் காண்டிராக்டர், வெஜிட்டேரியன் உணவு சமைத்து வைத்திருந்தார். நகரின் மிகப்பெரும் ஹோட்டல்களில் 100க்கும் மேற்பட்ட அறைகள், திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்காக முன்பதிவு செய்யப் பட்டிருந்தது.

lalu yadav residence - 2026

காலை திருமணம் முடிந்ததும் அங்கே காத்திருந்த ஆர்ஜேடி., தொண்டர்கள் என்று கருதப்படும் ஆயிரக்கணக்கான மக்கள், திருமண விருந்து உணவை உண்பதற்காக, முண்டியடித்தனர். போட்டிருந்த தடுப்புகளைக் கடந்து உள்ளே சென்றனர். விஐபி., ஊடகங்கள் என போடப்பட்டிருந்த பந்தல் பகுதிகளில் துணிகளை அகற்றி உள்ளே சென்றனர். அங்கே வைக்கப் பட்டிருந்த உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு சிட்டாகப் பறந்தனர். இதனால் அங்கே அடிதடி ரகளை ஏற்பட்டு அந்த இடமே குழப்பமாக இருந்தது.

இந்தக் களேபரத்தில் ஊடகத்தினர் கொண்டு வந்திருந்த கேமராக்கள், விலை உயர்ந்த கருவிகள் விழுந்து உடைந்தன. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டம் கட்டுக்கடங்காமல் அங்கும் இங்கும் அல்லாடியது. இதை அடுத்து, தங்கள் பொருள்கள் சேதமானது குறித்து ஊடகத்தினர் புகார் தெரிவித்தனர்.

பந்தியில் இடம் கிடைக்காத ஆத்திரத்தில் கட்சியினர் சிலர் டேபிள், சேர்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். இன்னும் சிலர், உணவுதான் நமக்குக் கிடைக்கவில்லை, இதையாவது எடுத்துச் செல்வோமே என்று உணவுப் பொருள்களை அள்ளிச் சென்றனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

இது குறித்து விளக்கம் அளித்த திருமண ஏற்பாட்டாளர்கள், 7 ஆயிரம் பேருக்கு தேவையான உணவு தயாரித்து வைத்திருந்தோம். ஆனால், இவ்வளவு கூட்டம் கட்டுக்கடங்காமல் வரும் என்று நாங்கள் முன்கூட்டியே கணிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர்.

திருமண விழாவில் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img