ரஜினிய பாத்த ‘ஆ’வேசத்துல விரல் மாத்தி மை வெச்ச ஆபீசர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

rajini cast vote1 - 2026

வாக்களிக்க வந்த ரஜினியின் எந்த கை விரலில் மை வைத்தார்கள் என்று ஒரே சர்ச்சை மயம் இன்று!

தனது வாக்கினை செலுத்துவதற்காக வாக்குச்சாவடிக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தைப் பார்த்த மகிழ்ச்சியில் எந்தக் கை விரலில் மை வைப்பது என தெரியாமல் வாக்குச் சாவடி அலுவலர் திணறித்தான் போனார்.!

அவருக்கு ரஜினிக்கு கை கொடுக்க ஆசை போலும்..! உடனே வலது கையை நீட்டிவிட்டார். ரஜினியின் இடது கைக்கு பதில் வலது கை ஆள்காட்டி விரலை பிடித்து மை தீட்டத் தொடங்கிவிட்டார். ஆனால் பரிதாபம்… அதை எடுத்துச் சொல்லவோ, சுட்டிக் காட்டவோ ரஜினிக்கு நேரமும் இல்லை! அவ்வளவு பரபரப்பு!

இது குறித்த தகவல் வெளியான போது, வாக்குச்சாவடியே திக்குமுக்காடிப் போனது. வலது கையால் உண்ணும் உணவை எடுத்து உண்பதால், பொதுவாக அதில் கறை படிய விடமாட்டார்கள். இரு வாக்களிப்புகள் ஒரே நாளில் இருந்தால் கூட, இடது கரத்தில் உள்ள இரு வேறு விரல்களில் மை வைப்பது வழக்கம்.

இந்நிலையில், வாக்குப்பதிவின் போது ரஜினிகாந்தின் வலது கையில் மை வைத்தது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.