இலங்கையில் 138 மில்லியன் மக்கள் பலி என தவறாகப் பதிவிட்டு… டிவிட்டை நீக்கிய டிரம்ப்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

Pakistan Could Be Put On Donald Trumps Immigration Ban - 2026

இலங்கையில் 138 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக தவறான எண்ணிக்கை கொடுத்து டிவிட் வெளியிட்டு, பின்னர் அதை டெலிட் செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

இலங்கையில் இன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, அதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்து வெளியிட்டார். அவரது கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

ட்ரம்ப் தனது டுவிட்டர் பதிவில், இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பினால் 138 மில்லியன் மக்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

trumptweet1 - 2026

டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் 138 பேர் என்பதற்கு பதிலாக 138 மில்லியன் என்று குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து அவரது பதிவை சரி செய்யும்படி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரிட்வீட் செய்தனர்.

இதனால் பகீர் அடைந்த டிரம்ப், தனது பதிவை நீக்கிக் கொண்டதுதன், திருத்தப் பட்ட புதிய பதிவினைச் செய்தார்.trumptweet2 - 2026

அதில், குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.

இலங்கையில் இன்று நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 228 பேர் உயிரிழந்ததாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.