ஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்!

கிசுகிசு சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

saravanan - 2026

நாயகனாக களமிறங்குகிறார் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன் ⁉ இதுதான் இன்றைய திரையுலக தலைப்புச் செய்தி!

முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்ஸ். தி.நகர், பாடி, குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மல்டி ஸ்டோர் ஷாப்பிங் மால் போல் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்துக்காக பிரம்மாண்டமான விளம்பரங்கள் தொலைகாட்சியில் அனுதினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த விளம்பரங்களில், முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வந்தனர். ஆனால் அண்மைக் காலமாக இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணனே நடிக்கத் துவங்கியுள்ளார்.

விளம்பரப் படங்களுக்கு கிடைத்த ஆதரவை அடுத்து,  தற்போது இவர் நாயகனாக நடிக்கவும் முடிவு செய்துள்ளார். இதற்காக கதை கேட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வரும் 2020ஆம் ஆண்டு … அதாவது அடுத்த வருடம் திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.