பாஜக., நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன் காலமானார்

சற்றுமுன் நெல்லை

kumaresa seenivasanbjp - 2026

பாஜகவின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் P.குமரேச சீனிவாசன் உடல் நலக் குறைவு காரணமாக திங்கள் கிழமை இன்று காலமானார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று தென்காசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். அவர் உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, திருநெல்வேலிக்கு அவரை மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் அவரது உடல் நிலை மிக மோசமடைந்து தென்காசியில் அவர் உயிர் பிரிந்தது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள இல்லத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அனைவரிடமும் எளிமையாகப் பழகுபவர். அவரது இழப்புக்கு நண்பர்கள், தென்காசி பகுதி இந்து இயக்கத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.