யூடியூப் வ்ளாகரை போட்டு சாத்திய பெண்கள்.
ஒரு யூடியூப் வ்ளாகரை மூன்று பெண்கள் சேர்ந்து அடித்து நொறுக்கினார்கள். பெண்களைப் பற்றி கேவலமாக பேசுவாயா? மன்னிப்பு கேள்! என்று எதிர்த்து நின்றார்கள்.
கேரளா தம்பானூரைச் சேர்ந்த விஜய் என்பவர் ஒருபுறம் டாக்டராக பணிபுரிந்து வரும்போதே யூடியூப் விளாகராகவும் புகழ் பெற்றிருந்தார். இந்தப் பின்னணியில் டாக்டர் விஜய் யூடியூபில் நம் தேசத்திலுள்ள பெண்ணீயவாதிப் பெண்கள் அதிலும் முக்கியமாக கேரளாவைச் சேர்ந்த பெண்ணியவாதிகள் ஏன் உள்ளாடைகளை அணிவதில்லை என்று வீடியோவில் பேசியுள்ளார். அதற்கு உதாரணமாக அந்த வீடியோவில் கவிஞர் பி. சுகதகுமரி, திருப்தி தேசாய், பிந்து அம்மணி, ரெஹனா ஆகியோரை டார்கெட் செய்து பேசியுள்ளார்.
இந்த வீடியோ சர்ச்சையாக மாறியது. இதுகுறித்த செய்தி அறிந்த வெட்ரன் டப்பிங் ஆர்டிஸ்ட் பாக்கியலட்சுமி மற்றும் டியாசனா, ஸ்ரீலக்ஷ்மி அரக்கல் ஆகியோர் விஜய்யை தாக்குவதற்கு வந்து அவர் மீது இங்க் ஊற்றி அடிக்கத் தொடங்கினார்கள். அந்த தாக்குதல் நடந்தபோது சோசியல் மீடியாவில் லைவ் வரும்படியாக பார்த்துக்கொண்டார்கள்.
அதன் பின்பு அந்தப் பெண்கள் பேசியபோது போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தாலும் போலீசார் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்தார்கள். அதனால்தான் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு டாக்டர் விஜய்க்கு ஒரு பாடம் கற்பித்தோம் என்றார்கள் என்று தெரிவித்தார்கள்.
பரபரப்பான அந்த வீடியோ இதோ



