ஏழை மணப்பெண்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் நற்செய்தி.
ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.
இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஏழை குடும்பத்து பெண்களுக்கு நிதியுதவி செய்வதோடு துணையாக நிற்கிறது.
இந்த திட்டத்தின் தொடர்பாக வழிகாட்டுதல்களும் எவ்வாறு விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும் என்னும் விவரங்களும் அரசாங்க வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மிக ஏழை குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமண நிகழ்ச்சிகள் ஒரு சுமையாக ஆகாமல் இருப்பதற்காகவும் மணப்பெண்ணாக மாமியார் வீட்டுக்கு சென்ற பிறகு கூட பாதுகாப்பின்மை இல்லாமல் இருப்பதற்காகவும் ஜெகன் அரசாங்கம் திருமண காணிக்கை திட்டத்திற்கு பிள்ளையார் சுழியிட்ட விஷயம் தெரிந்ததே. இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு நிதி உதவி செய்வதன் மூலம் துணையாக இருப்பதோடு கூட பால்ய விவாகங்களை முழுமையாக நீக்குவதற்கும் திருமணங்களை ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதன் மூலம் மணப்பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் ஒய்எஸ்ஆர் திருமண காணிக்கை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் தொடர்பாக விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது.
இது குறித்து எவ்வாறு ரெஜிஸ்ட்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் ஆன்லைன் மூலம் விவரங்களை வெளியிட்டுள்ளது.



