விளம்பரம் இல்லாத வெங்கடேஸ்வரா சேனல்

Published:

விளம்பரம் இல்லாத சேனலாக மாறப்போகும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல்.

எஸ்விபிசி புதிய கட்டிடத்தை திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்… மறைந்த முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி 2007ல் எஸ்விபிஸி சைனலை வடிவமைத்தார் என்றும் அவருடைய அனுமதியோடு தான் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றும் தெரிவித்தார். 2008 ஏப்ரல் 7 ம் தேதி டெஸ்ட் சிக்னல் நடந்ததாகவும் அதே ஆண்டு ஜூலையில் முழுஅளவில் ஒளிபரப்புகள் தொடங்கி விட்டன என்றும் நினைவுபடுத்தினார்.

குறைந்த காலத்திலேயே எஸ் வி பி சி பக்தர்களின் பாராட்டைப் பெற்றது என்றும் அதன்பிறகு 2017ல் தமிழ் சேனல் கூட ஆரம்பமாகின என்றும் தெரிவித்தார்.

புதிய கட்டத்திலேயே இரண்டு ஸ்டுடியோக்களும் டெலி போர்ட்களும் இருப்பதாக கூறினார். எஸ் வி பி சி யை அட்வர்டைஸ்மென்ட் ஃப்ரீ சேனலாக அமைக்க ஏற்பாடு செய்வதாகவும் அதற்காக பக்தர்களிடம் இருந்து நன்கொடைகளைப் கேட்டிருப்பதாகவும் ஒய்வி சுப்பா ரெட்டி தெரிவித்தார். அதற்குள் 4 கோடி ரூபாய்கள் வந்து சேர்ந்தன என்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று விரைவிலேயே கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கூட சேனல்கள் அமைப்போம் என்றும் குறிப்பிட்டார்.

எஸ்விபிசி யை முழுமையாக ஹெச் டி சேனலாக மாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

Screenshot 2020 10 01 16 35 26 242 com.whatsapp - 2026

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img