
பீட்ரூட் கோளா உருண்டை
தேவையானவை:
பீட்ரூட் – 1,
பெரிய வெங்காயம் – 1,
துவரம்பருப்பு – அரை கப்,
எண்ணெய் – 1 கப்.
அரைக்க:
காய்ந்த மிளகாய் -12,
சோம்பு – அரை டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
உப்பு -தேவைக்கேற்ப.
செய்முறை:
பீட்ரூட்டைக் கழுவி, தோல் நீக்கி துருவவும். துவரம்பருப்பை ஊறவைத்து, பெருவெட்டாக அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
துருவிய பீட்ரூட், வெங்காயம், அரைத்த பருப்புக் கலவை மூன்றையும் பிசறி, வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளிப் போட்டு, வெந்ததும் அரித்தெடுக்கவும். அடுப்பை குறைந்த தணலில் வைத்துக்கொள்ளவும். இது, மதிய உணவுக்கு மட்டுமல்ல. மாலை நேரத்துக்குமான டிபன்.



