கொரோனாவால் பத்திரிகையாளர் மரணம்; முதல்வர் இரங்கல்!

Published:

hyderabad jounalist manoj
hyderabad jounalist manoj
  • கரோனாவால் ஹைதராபாத் பத்திரிக்கையாளர் மரணம்.
  • முதலமைச்சர் கேசிஆர் இரங்கல்.
  • பிரமுகர்கள் ஜெர்னலிஸ்ட் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்து உள்ளார்கள்.

இருந்தாற் போலிருந்து மனோஜ் காலமானதை குடும்பத்தினரும் அவர் பணிபுரியும் டிவி சேனல் ஊழியர்களும் ஏற்றுக் கொள்ள இயலாமல் பரிதவிக்கின்றனர்.

ஹைதராபாத் நகரத்தில் கரோனா வைரஸ் சிகிச்சை பெற்று வந்த ஒரு ஜர்னலிஸ்ட் மரணமடைந்துள்ளார். கொரோனாவால் மாநிலத்தில் ஒரு ஜர்னலிஸ்ட் மரணமடைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்னலிஸ்ட் மனோஜுக்கு ஒரு நாள் முன்புதான் கரோனா பரவியது கண்டறியப்பட்டது. வைரசின் அறிகுறிகள் அவரிடம் தெரிந்ததால் மனோஜை காந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். சிகிச்சை அளித்து வந்தார்கள். அவருடைய உடல்நலம் ஆபத்தானதாகி ஞாயிறன்று மரணித்தார்.

மாதன்னபேட்டையை சேர்ந்த மனோஜ் பல டிவி சேனல்களில் பணிபுரிந்துள்ளார். தற்போது டிவி5 சேனலில் கிரைம் ரிப்போர்ட்டராக பொறுப்பு நிர்வகித்து வந்தார். பல பிரமுகர்கள் மனோஜ் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்து உள்ளார்கள்.

இருந்தாற் போலிருந்து மனோஜ் கொரோனாவால் மரணமடைந்ததை குடும்பத்தினரும் அவர் பணிசெய்த டிவி சேனல் ஊழியர்களும் ஏற்றுக் கொள்ள இயலாமல் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். தெலங்காணாவில் சனிக்கிழமை ஒரு நாளிலேயே 206 பாசிட்டிவ் கேசுகள் பதிவாகியுள்ளன. மேலும் 10 பேர் இறந்து போனார்கள்.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!
hyderabad jounalist manoj
hyderabad jounalist manoj

மனோஜ் மரணம் குறித்து முதலமைச்சர் கேசிஆர் இரங்கல் தெரிவித்தார். அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

ஜேர்னலிஸ்ட் மனோஜ்குமார் கொரோனாவால் மரணமடைந்தது தன்னை வருத்தத்தில் ஆழ்த்தியதாக அமைச்சர் ஹரீஷ் ராவு கூறினார். இந்த நேரத்தில் பணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் பொறுமையும் மிகவும் தேவை என்றார். அனைவரும் கவனத்தோடு வேலையில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தெலங்காணா பிஜேபி தலைவர் பண்டி சஞ்சை மனோஜ் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.

கரோனா பாசிட்டிவ் என்று தெரிந்த மறு நாளே மனோஜ் மரணமடைந்தார். covid-19 நோயில் சிக்கிய ஜர்னலிஸ்ட் அறிகுறிகள் கண்டறிந்த ஒரே நாளிலேயே மரணமடைந்தது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கரோனா வாரியர்களாக டாக்டர்கள் போலீசார் தொழிலதிபர்கள் தொழிலாளர்களின் கடமை மிகவும் உன்னதமானது. அதேபோல் மீடியாவின் பங்கும் மிகவும் முக்கியமானது.

இந்த வரிசையில் இளைஞரான ஒரு ஜர்னலிஸ்ட் கோவிட் 19 நோயில் சிக்கி கண் மூடினார். மனோஜ் குமார் tv5 மீடியாவில் க்ரைம் ரிப்போர்ட் ஆக பணிபுரிந்து வந்தார். இதன் பின்னணியில் அவருக்கு கரோனா வைரஸ் பரவியது. ஆனால் covid-19 பாசிட்டிவாக தெரிந்த மறுநாளே ஜேர்னலிஸ்ட் மனோஜ்குமார் இறந்தது வருத்தமளிக்கிறது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
cm condoles manoj
cm condoles manoj

ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒன்பதரை மணிக்கு மனோஜ் இறந்துபோனார் என்று காந்தி மருத்துவமனை சூப்பரின்டென்டன்ட் டாக்டர் ராஜாராவு தெரிவித்தார். ரிப்போர்ட்டர் மனோஜ் குமாருக்கு மயுஸ்தீனியா கிரேவிஸ் என்ற நுரையீரல் சம்பந்தமான நோய் இருப்பதாக தெரிவித்தார்.

அவருக்கு சென்ற வருடம்தான் திருமணம் ஆனது. மனோஜ்குமாரின் மனைவி தற்போது கர்ப்பிணி என்று தெரிகிறது.

சக ஜர்னலிஸ்டுகள் அன்போடு லட்டு என்று மனோஜை அழைப்பார்கள். அவர் இறந்ததை சக ஜர்னலிஸ்ட்கள் ஏற்க இயலாமல் பரிதவிக்கின்றனர். மனோஜின் இறப்பு குறித்து journalist’s சங்கங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன. தெலங்காணாவில் கரோனாவால் மரணித்த முதல் ஜேர்னலிஸ்ட் மனோஜ்குமார் என்று தெரிவித்துள்ளார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img