
10 ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கக் கோரிய வழக்கு ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது.
10ம் வகுப்பு தேர்வை வரும் ஜூன் 15ம் தேதி நடத்த தமிழக அரசின் தேர்வுத் துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், ஜூன் 30வரை ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டிருக்கும் சூழலில் ஜூன் 15ம் தேதி தேர்வுகளை நடத்தக் கூடாது என்று கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்றமும் ஜூன் 15ம் தேதி அனுமதிக்க முடியாது, ஜூலை 2ம் வாரத்தில் தேர்வுகளை நடத்த ஆலோசிக்கலாமே என்று கூறியது.
ஆனால், பத்தாம் வகுப்பு தேர்வுகளை நடத்த இதுவே சரியான தருணம் என்று கூறியது தமிழக அரசு.
இதை அடுத்து, இந்த வழக்கு ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.



