திமுக அடுத்த தலைவா் யார்? ஜெயக்குமார் பளிச்

சற்றுமுன் மதுரை

08 09 May Jayakumar - 2026

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தோ்தல் பிரச்சாரத்திற்கு வந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமார் பத்திரிக்கையாளா் சந்திப்பில் :தி.மு.க., இடைத்தேர்தலில் தோற்றால், அழகிரிதான் அடுத்த தி.மு.க., தலைவராவார் என்று ‘பஞ்ச்’ வைத்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் விளாச்சேரி பகுதியில் பிரசாரம் செய்தேன். அதே பகுதியில் தான் ஸ்டாலினும், பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ”சென்று வா மகனே சென்று வா” என்ற பாடல் பாடியது. அது கலைஞா் கருணாநிதி கதை, வசனம் எழுதிய பும்புகார் எனும் படத்தில் கோவலன் மதுரைக்கு வரும்போது ஒலிக்கும் பாடல் அதன் பிறகு கோவலன் பும்புகாருக்கு திரும்பி வரவே இல்லை தி.மு.க.,வின் கதையும் அது தான். ஸ்டாலின் இனி திரும்ப வரவே முடியாது என்பதற்கு அந்த பாடலே சாட்சி.

தற்போது தி.மு.க.,வில் நடக்கும் சில செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகம் எழுவதாக கூறப்படுகிறது. . கனிமொழி மற்றும் துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனைகள் ஸ்டாலின் சொல்லித்தான் நடந்ததாக தி.மு.க., வட்டாரங்களில் பேசுகின்றனர். தற்போது நடைபெறும் தேர்தலில் தி.மு.க., தோல்வி அடையும் பட்சத்தில், தி.மு.க., தலைவராக மதுரை மண்ணின் மைந்தர் மு.க.அழகிரி தான் தலைவராக பதவி ஏற்பார்,” என்று பளிச் சென கூறினார். .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.