எய்ட்ஸ் நோய்க் கிருமி தொற்றுள்ள ஊசியை செலுத்தி, எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் சுமார் 90 பேருக்கு ஹெச்ஐவி – எய்ட்ஸ் கிருமி தொற்று கொண்ட ஊசியை செலுத்தி, எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவரை அந்நாட்டு காவல் துறை கைது செய்துள்ளது.
பாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் முசாஃபர் கங்காரோ என்பவர், ராட்டோரேடோ பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். அவருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் சோகத்தில் ஆழ்ந்த அந்த டாக்டர், தனது நோயாளிகளுக்கும் ஹெச்ஐவி கிருமி தொற்றுள்ள ஊசியை செலுத்தியுள்ளார். தான் பெற்ற நோய் தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கும் வரட்டுமே என்ற எண்ணம் தான் காரணம்.
இவருடைய இந்தக் கிறுக்குத்தனமான செயலால், சுமார் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுள் 65 பேர் குழந்தைகள் என்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரின் பாகிஸ்தான் காவல் துறையினர் அந்தக் கொடூர மருத்துவரைக் கைது செய்துள்ளனர்.




