இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றுள்ளனர் என்று இலங்கை ராணுவ தளபதி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இது இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர் என்று இலங்கை ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் தெரிவித்துள்ளது இப்போது பெரும் பேசுபொருளாக உள்ளது.
இலங்கையில் கடந்த ஏப்.21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய பயங்கரவாதிகள், கிறிஸ்துவர்களைக் குறிவைத்து, ஈஸ்டர் பண்டிகை நாளில் 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பை நடத்தினர்.
இது குறித்து செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயக, குண்டு வெடுப்பு சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவில் காஷ்மீர், கேரளா ஆகிய மாநிலங்களிலும், பெங்களூருவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும், அவர்கள் இந்த இடங்களில் பயிற்சி பெற்றுள்ளனர் என்று கூறிய அவர், இதை இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் கண்டுபிடித்து தகவல் தெரிவித்துள்ளன என்று கூறினார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என சந்தேகப்படும் பலர் பிடிபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரது இந்தத் தகவல் இப்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.





TN politicians encouraged this in the name of secular including Congress.