பிரியங்கா சோப்ராவின் பேஷன் ட்ரெஸ் ஸ்டைலை யோகி பாபுவுடன் ஒப்பிட்டு கிண்டல்!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சென்னை லைஃப் ஸ்டைல்

yogi babu - 2026

பிரியங்கா சோப்ராவின் ஃபேஷன் ட்ரெஸ் ஸ்டைலை யோகி பாபுவுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளனர்.

நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ராவின் ஸ்டைலை, யோகி பாபுவுடன் ஒப்பிட்டு மீம் உருவாக்கியுள்ளனர். 2019-ம் ஆண்டுக்கான ‘மெட் கலா’, நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் நிக் ஜோன்ஸ், தனது மனைவி பிரியங்கா சோப்ராவுடன் கலந்து கொண்டார். இந்தியாவிலிருந்து இவர்கள் இருவரைத் தவிர தீபிகா படுகோனும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த உடை, அவரது ஹேர் ஸ்டைல் மற்றும் மேக்கப் ஆகியவை கிண்டலுக்கு ஆளாகியுள்ளன. சமூக வலைதளங்களில் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரியங்காவின் புகைப்படத்தை யோகி பாபுவின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு யாரோ ஒருவர் மீம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அந்த மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யோகி பாபுவும் இந்த மீம்ஸை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.