மாயமான அமெரிக்க ஜெட் விமானம் விபத்து…!

உலகம் சற்றுமுன்

jet air - 2026

மாயமான அமெரிக்க தனியார் ஜெட் விமானம் மெக்சிகோவில் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லாஸ் வேகாசில் இருந்து ஊழியர்கள் உள்ளிட்ட14 பேருடன் ஜெட்விமானம் ஒன்று மெக்சிகோவின் மான்ட்டெர்ரி (Monterrey) நகருக்குப் புறப்பட்டுச் சென்றது. அன்று மாலையே விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தரைக்கட்டுப்பாட்டு மையத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் மெக்சிகோவின் ஒகாம்போ (Ocampo) என்ற இடத்தில் மலைப் பகுதிகளுக் கிடையே விமானம் நொறுங்கி விழுந்தது தொடர்பான காட்சிகளை மெக்சிகோ தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது.

விமானத்தில் இருந்த 14 பேர் குறித்த தகவல் தெரியாத நிலையில் அவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.