சென்னை: சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பொதுவான கருத்தில் மோசமாக சித்திரித்து எழுதப் பட்ட பேஸ்புக் பதிவு ஒன்றை பார்வர்ட் செய்த கடுமையான குற்றத்துக்காக, எஸ்.வி.சேகர் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.
தொடர்ந்து பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் அவர் மீது வழக்கு தொடரப் பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக அம்பத்தூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை அளித்தார் நடிகர் எஸ்.வி.சேகர்.




